Pages

மின்னஞ்சலை தடுத்து நிறுத்த

தவறாக அனுப்பிய மின்னஞ்சலை தடுத்து நிறுத்த
சில சமயங்களில் Gmail லில் எவருக்காவது மின்னஞ்சல் செய்யும்பொழுது, Send கொடுத்தபிறகுதான் நினைவுக்கு வரும், அதில் ஏதாவது தவறுகளோ அல்லது குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்பவேண்டிய மெயிலை வேறு எவருடைய விலாசத்திற்கோ அனுப்பிய விஷயம்.

உடனடியாக உலவியை க்ளோஸ் செய்வது, அல்லது இணைய கேபிளை நீக்குவது என டென்ஷனில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் அல்லாட வேண்டியிருக்கும். ஆனால் நீங்கள் என்னதான் செய்தாலும் மெயில் அனுப்பப்பட்டு விடும். இதற்கு ஜிமெயிலில் Undo வசதி இருந்தால் எப்படி இருக்கும்?

Google Labs வழங்கும் Undo send என்ற வசதி சில சமயங்களில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஜிமெயிலில் இந்த வசதியை உருவாக்க,

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள், பிறகு வலது மேல் மூலையிலுள்ள Settings Link ஐ கிளிக் செய்து அதில் Labs லிங்கை கிளிக் செய்து, பட்டியலில் Undo send என்பதற்கு நேராக உள்ள enable என்பதை கிளிக் செய்யுங்கள்.



இனி send கொடுத்தபிறகு வரும் confirmation செய்தியில் Undo என்ற வசதி வந்திருக்கும். இதை கிளிக் செய்தால் போதுமானது.



ஆனால் இந்த வசதி நீங்கள் மெயிலை send கொடுத்தபிறகு ஐந்து விநாடிகள் மட்டுமே உங்கள் மெயிலை தடுத்து வைக்கும். ஏற்கனவே அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப பெறாது. (எதுவானாலும் கணினியை அணைப்பதை விட இது நல்ல முறையாக தெரிகிறது.)

Read Users' Comments (0)

என்னைக் காதலிக்கிறாய் என்றால்....



நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
நீ ஏன் என்னை அழைக்கக் கூடாது ?
எப்போதும் உன்னை
கைப்பேசியில் அழைப்பது
நானாகத்தான் இருக்க வேண்டுமா ?

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
பிறகு நீ ஏன் என் கைகளைப்
பற்றிக்கொள்ளக் கூடாது;
நாம் வெளியே போகும் போதெல்லாம் ?

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
பிறகு ஏன் மன்னிப்பு கேட்கிறாய்
என்னைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு.

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
அருகில் செல்லும்
அழகானப் பெண்களைக் காணும்போதெல்லாம்
என் எதிரிலேயே
உன் கண்களில் ஏன்
காமம் கசிகிறது.

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
என்னை ஏன் அடிமைப்படுத்த
எண்ணுகிறாய்?
நான் மாறவேண்டும் என்று
ஏன் நிர்பந்திக்கிறாய்?

ஏனென்றால். . . .
நீ
என்னைக் காதலிக்கவே இல்லை.
ஆனால்
அதை சொல்லத் தைரியமற்று தயங்குகிறாய்.

நீ தயங்குவதைக் கண்டு
என் மனம் புண்படுகிறது.

நான்
உண்மையை ஏற்றுக்கொள்வதைத் தவிர
ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை.

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்

http://maharandan.blog.co.uk/

Read Users' Comments (0)

பிகர் மடக்குவது எப்படி



என் அருமை கல்யாணமாகாத நண்பர்களே!!ஃபிகர் மடக்குவது எப்படி, கடலை போடுவது எப்படின்னு ஏகப்பட்ட மேட்டர் நம்ம மக்கள் பிளாகில் போடுறாங்க!

வெளிய போகும்போடு செம ஸ்டைலாப் போவீங்க! நாங்க சொல்லித்தர வேண்டியதில்லை!

நான் நீங்க வீட்டிலோ, ரூமிலோ இருக்கும்போது ?ரூம் பத்தி சொல்ல வேண்டியது இல்லை!!

நான் சொல்லப்போறது ரொம்பத்தேவையான விசயம்னு தலைப்பைப் பார்த்தவுடனே தெரிந்து இருக்கும்!

திடீர்னு நீங்க விரும்புகிற ஃபிகர் எப்பவோ நீங்க சொன்ன அட்ரெஸ்ஸ வச்சு ” சும்மா இந்தப் பக்கமா வந்தேன் , அப்படியே உங்க ஞாபகம் வந்ததுன்னு “உள்ளே நுழைந்தால்!!...............”இப்படியெல்லாம் சந்தர்ப்பம் வருமா?ன்னு” கேக்கக்கூடாது!

ஃபிகர் எல்லாம் எந்த நேரத்தில் எங்கே நுழைவார்கள் என்று தெரியாது!!

””எப்ப வருவாங்கன்னு தெரியாது! நமக்கு மச்சம் இருந்தா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்து விடுவார்கள்!””

அப்படி உள்ளே நுழைந்து விட்டால்? நடக்கும் கூத்தே தனிதான்!

சரி!! நாம் அறையை எப்படி வைத்து இருக்க வேண்டும் என்று பார்ப்போம்!!

1. அறையில் எங்காவது ஒரு இடத்தில் நீங்கள் செய்த மரத்தால், இல்லை ஐஸ் குச்சி ,இல்லை மூங்கில் குச்சி வைத்து செய்த பொருளை மாட்டி வைக்கவும்!! (அட்லீஸ்ட் விளக்குமாத்துக் குச்சி!!!)இல்லையா நீங்க செய்தா எப்படி இருக்குமோ?... அதுக்குத் தோதா ஒன்னை வாங்கி வைங்க. எப்பவோ 12த் படிக்கும்போது செய்தது!ன்னு அள்ளி விடுங்க!

அதை வச்சு ஒரு ஜோக்கூட அடிக்கலாம். ”படித்து முடித்து வேலை கிடைக்கலைன்னா கை வசம் தொழில் இருக்கு”.என்பது போல!! நீங்க செல்ஃப் ஜோக் அடிச்சா ரசிப்பாங்க! மறந்து போய் அவங்களை வைத்து ஜோக் அடிச்சீங்க! சாப்டர் குளோஸ்!!!

2.இருவர் விளையாடும் வீடியோ கேம்! வீடியோ கேம் குழந்தைங்க விளையாடுவதுன்னு நினைச்சா அதை மாத்திக்கங்க! இரண்டு பேர் சேர்ந்து ஆடி அவங்களையும் ஜெயிக்கவிடுங்க! அப்பத்தான் நீங்க ஜெயிக்கலாம்!! என்ன புரிந்து இருக்குமே!

3.நல்ல சமையல் அடுப்பு அவசியம் இருக்கணும்!! கன்னங்கரேல்னு ஒரு ஸ்டவ்வைப் பத்தவச்சீங்க ..நிலைமை மோசம்தான்!

ரெண்டு மூனு அயிட்டம் செய்ய்த்தெரிந்து வச்சுக்கோங்க! திடீர்ன்னு பிரெட் டோஸ்ட் மாதிரி ஏதாவது செய்து அசத்துங்க!! அப்புறம் என்ன? உங்க ராஜ்ஜியந்தான்!!

4.ஜிம்மிக்ஸ் வேலை செய்த உங்கள் போட்டோ ஆல்பம்( ஒரிஜினல் நாட் அட்வைஸ்ட்),

டூர் ஆல்பம்(அதுல மேக்ஸிமம் லாங்க் ஷாட் தானே இருக்கும்!!!உங்கள் குளோசப் கூடவே கூடாது!) ஆகியவற்றை டேபிளின் மேல் பார்வையில் படும்படி வைக்கவும்!! அவற்றின் மூலம் ஏகப்பட்ட விசயம் பேசலாமே!!

5.சாக்கலேட் மில்க், பெப்ஸி,கோலா ஆகியவற்றை கொஞ்சம் வைத்திருங்கள்! அந்த நேரத்துக்கு ஓடி அலையக்கூடாது!! என்ன சரிதானே!!பீ கூல்!

ரம் ,பீர்ன்னு வெளிய எடுத்திடாதீங்க!! அந்த பாட்டில்கள் கண்ணில் படாமல் இருக்கட்டும்!

6.நீங்கள் சென்ற இடங்களின் போட்டோக்களை பெரிதுபடுத்தி காலேஜ் நோடீஸ்போர்ட் போல கொலாஜ் பாணியில் சுவற்றில் ஒட்டி அலங்கரித்து வைங்க! மொத்தமும் பார்த்தா ஒங்க டூர் மொத்தமும் ஞாபகம் வரணும்!!போன இடம் வந்த இடம் என்று ஏகப்பட்ட விசயங்கள் பேசலாம், கடலை இழுத்துக்கொண்டே போகும்!!


7.பெண்களுக்கு செல்லப்பிராணிகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்!!! நாய்,பூனை போல. நாய் பூனை இல்லைன்னா மீன் தொட்டியாவது சின்னதாக வைத்து விடுங்கள்! இதெல்லாம் பார்த்தா பெண்கள் உங்களை பொறுப்பானவர் என்று நினைப்பார்களாம்!!!

8. எதாவது இசைக்கத்தெரியுமென்றால் நீங்க பாஸ்!! தெரியாதா? இப்போதிலிருந்தே ஏதாவது ஒரு இசைக்கருவியை எப்படியாவது கற்றுக்கொள்ளுங்கள்!! கிடார் மாதிரி ஒன்னைக் கண் படும் விதத்தில் வைக்கவும்!! வாசிக்கலைன்னாலும் அதைக்கையிலெடுத்துப் பார்ப்பார்கள் பாருங்க!! அப்புறம் என்ன? அசத்தல்தான்!

என்ன பேச்சலர்ஸ் ரெடியா?

இவ்வளவு திறமையும் ஏற்கெனவே இருக்கு பாஸ்ன்னா ஓக்கே!!!

இல்லைன்னாலும் பரவாயில்லை! ஆரம்பிங்க இப்போதிருந்தே!!



http://abidheva.blogspot.com/2009/04/8.html
--
உதவி செய்தல்தான் உறவின் துவக்கம். அங்கே உண்மையிருப்பின் உறவு பலப்படும்.

Read Users' Comments (0)

பென் ட்ரைவில் மறைந்துபோன ஃபோல்டர்

நாம் வழக்கமாக நமது பென்ட்ரைவில் அத்தியாவசியமான கோப்புகளையும் அவற்றை உள்ளடக்கிய கோப்புறைகளையும் (Folders) சேமித்து வைப்பது வழக்கம். மால்வேர் மற்றும் ஸ்பைவேர்கள் உடனடியாக மற்றும் எளிதாக தாக்குவது பென் ட்ரைவை என்பதனால் சில சமயங்களில் நமது அதி முக்கியமான கோப்புறைகள் மறைக்கப் பட்டுவிடலாம். அதாவது உங்கள் பென் ட்ரைவில் கோப்புறைகள் இருக்கும் ஆனால் உங்களால் பார்க்கவோ, உபயோகிக்கவோ இயலாது. பென் ட்ரைவில் Usage space ஐ சோதித்தால் கோப்புறைகள் மறைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.

ஒரு சில மால்வேர்களின் வேலையே பென் ட்ரைவில் உள்ள கோப்புறைகளின் பண்பு கூற்றை (attribute) மாற்றி விடுவதுதான். இதனால் உங்கள் பென் ட்ரைவில் உள்ள கோப்புறைகளின் பண்பு கூறு Hidden ஆக மாறி விடுகிறது. இதை சரி செய்ய Explorer -ல் Attribute பகுதிக்குச் சென்றால் அங்கு Attribute வசதி செயல் இழக்கம் (Greyed out) செய்யப்பட்டிருக்கும். ஒரு சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் மூலமாக முயற்சி செய்தாலும் சில சமயங்களில் மீட்பது சிரமம்தான்.

இந்த நிலையில் என்ன செய்யலாம்?

முதலில் உங்கள் பென் ட்ரைவின் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொள்ளுங்கள். உதாரணமாக I: என வைத்துக் கொள்வோம். Command Prompt ஐ திறந்து கொண்டு i: என டைப் செய்து என்டர் கொடுங்கள்.

இனி வரும் I:> என்ற ப்ராம்ப்ட்டில் attrib -r -s -h *.* /s /d என டைப் செய்து என்டர் கொடுங்கள்.


உங்கள் பென் ட்ரைவில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் அளவைப் பொறுத்து இந்த கட்டளை செயல்படும் நேரம் மாறுபடும். மறுபடியும் I:> ப்ராம்ப்ட் வந்த பிறகு Exit என டைப் செய்து என்டர் கொடுத்து விண்டோஸ் க்கு வந்து விடலாம். இப்பொழுது My Computer சென்று பென் ட்ரைவை திறந்து பாருங்கள். உங்கள் கோப்புறைகள் மீட்டெடுக்கப் பட்டிருப்பதை காணலாம்.

இந்த பணியை செய்ய Files & Folders Reset Tool என்ற கருவி உள்ளது. ஆனால் ஒரு சில பென் ட்ரைவ்களில் இது சரியாக வேலை செய்யவில்லை. எதற்கும் முயற்சித்துப் பாருங்கள்.

Read Users' Comments (0)