![]() |
மென் பொருட்களை இலவசமாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்
![]() | Avira AntiVir Personal | ![]() | |
![]() | Kaspersky Anti-Virus | ![]() | |
![]() | ![]() | ||
![]() | ![]() | ||
![]() | ![]() | ||
![]() | ![]() |
Posted in | நேரம் 10:45 AM
![]() |
மென் பொருட்களை இலவசமாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்
![]() | Avira AntiVir Personal | ![]() | |
![]() | Kaspersky Anti-Virus | ![]() | |
![]() | ![]() | ||
![]() | ![]() | ||
![]() | ![]() | ||
![]() | ![]() |
Posted in | நேரம் 10:41 AM
உங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் (அதாவது வைரசு தொற்றி இருக்குமோ என்ற வகையில்) அவற்றை வைரசுடோட்டல் என்னும் இந்த தளத்தில் ஏற்றிச் சோதித்துப் பாருங்கள்.
இந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் கொண்டு இந்த ஏற்றப்பட்ட கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள். உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும்.
இலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்.
Posted in | நேரம் 10:39 AM
Registry என்றால் என்ன?
விண்டோஸ் இயங்கு தளத்தில் ரெஜிஸ்ட்ரி (பதிவகம்) என்பது ஒரு தரவுத் தளம். புதிதாக ஒரு வன்பொருளை அல்லது மென்பொருளை கணினியில் நிறுவும்போது அல்லது நீக்கும்போது அவை பற்றிய விவரங்களை தொடர்ச்சியாகப் பதியப்படும் ஒரு தரவுத் தளமே இந்த ரெஜிஸ்ட்ரி. கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய விவரங்கள் ரெஜிஸ்ட்ரியிலேயே பதியப்படுகின்றன.
விண்டோஸில் என்னென்ன செட்டிங்ஸ் செய்யப்பட்டுள்ளன, கணினியை இயக்கியதும் எந்த எப்லிகேசன்களை ஆரம்பிக்க வேண்டும், ஒவ்வொரு பயனரும் என்ன செட்டிங்ஸ் வைத்திருக்கிறார், பல்வேறு எப்லிகேசன்களாலும் உருவாக்கப்படும் பைல் வகைகள் என்ன போன்ற் பல்வேறு தகவல்களை ரெஜிஸ்ட்ரி பதிந்து கொள்கிறது.
டெஸ்க்டொப்பில் நீங்கள் காண்பவற்றையும், ஸ்டார் மெனு மற்றும் டாஸ்க் பார் என்பன எவ்வாறு இயங்குகின்றன, இயங்கு தளம் எவ்வாறு ஆரம்பிக்கின்றது என்பதனையும் ரெஜிஸ்ட்ரியே தீர்மாணிக்கின்ற்து.
விண்டோஸ் 95 ற்கு முந்திய பதிப்புகளில் .ini (initialization) எனும் பைல் இந்த செயற்பாடுகளைத் தீர்மாணித்தன. இதற்கு மாற்றீடாகவே இந்த ரெஜிஸ்ட்ரி உருவாக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் ஒருவர் மாற்றங்கள் செய்யும்போது தன்னையறியாமலேயே ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்கிறார். ரெஜிஸ்ட்ரியில் நாமாகவும் மாற்றங்கள் செய்யலாம்.
ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் செய்வதில் மிகுந்த அவதானம் தேவை. சராசரி கணினிப் பயனர்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் செய்யாமலிருப்பதே நல்லது. ஏனெனில் நீங்கள் விடும் ஒரு சிறிய தவறும் கணினியில் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்வதற்கு முன்னர் ஒரு முன்னேற்பாடாக அதனை பேக்கப் (Backup) செய்து கொள்ள வேண்டும் அல்லது ஒரு ரீஸ்டோர் பொயிண்டை (Restore Point) உருவாக்கிக் கொள்ள வேண்டும். (பேக்கப், ரீஸ்டோர் பற்றி ஏற்கனவே இந்தப் பகுதியில் சொல்லியிருக்கிறேன்)
எப்லிககேசன்களை முறையாக நீக்கப்படாதபோது ரெஜிஸ்ட்ரியில் அது பற்றிய தகவல்கள் சிதறலாக தேங்கியிருக்கும். இதனால் கணினியின் இயக்கத்தில் மந்த நிலை தோன்றும். அல்லது அடிக்கடி பிழைச் செய்திகளைக் (Error Messages) காண்பித்து எரிச்சலூட்டும். சில வேளை கனினி இயக்கமற்று முடங்கிப் போகவும் கூடும்.
ரெஜிஸ்ட்ரியில் ஏற்படும் வழுக்களை நாமாக சரி செய்யவும் முடியும். அவற்றைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வென (Registry Cleaners) ரெஜிஸ்ட்ட்ரி க்ளீனர்ஸ் எனும் ஏராளமான மென்பொருள் கருவிகளும் பாவனையில் உள்ளன.
மாதத்தில் ஒரு முறையேனும் இந்த ரெஜிஸ்ட்ரி க்ளீனரை இயக்கி ரெஜிஸ்ட்ரியில் ஏற்படும் பிழைகளை நீக்கிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அடிக்கடி மென்பொருள்களை நிறுவுதல், நீக்குதல், பிழைச் செய்திகள் அடிக்கடி தோன்றுதல், கணினியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படல் போன்ற சந்தர்ப்பங்களில் ரெஜிஸ்ட்ரி க்ளீனரை அடிக்கடி இய்க்கிக் கொள்ளுதல் நல்லது. சில ரெஜிஸ்ட்ரி க்ளீனர்களில் உரிய கால இடைவெளிகளில் தானாகவே இயங்கும் வசதியும் இணைக்கபட்டிருக்கும். இந்த வசதி இல்லையாயின் விண்டோஸிலுள்ள ஸ்கெடியூல்ட் டாஸ்க் (Scheduled task) எனும் வசதியைப் பயன் படுத்தலாம்.
ரெஜிஸ்ட்ரி கட்டமைப்பு
ரெஜிஸ்ட்ரியானது ஐந்து தனியான கட்டமைப்புகளைக் கொண்டது. இவை ரெஜிஸ்ட்ரி தரவுத் தளத்தை முழுமையாகாப் பிரதி நிதித்துவப் படுத்துகின்றன. இந்த ஐந்து பிரிவுகளும் கீஸ் (Keys) எனப்படுகின்றன. ஒவ்வொரு கீயும் பல உப பிரிவுகளையும், உப பிரிவிகள மேலும் பல உட் பிரிவுகளையும் உள்ளடக்கியிருக்கும். அத்தோடு ஒவ்வொரு கீயும் பல்வேறு பெறுமானங்களையும் கொண்டிருக்கும்.. இங்கு HKEY என்பது Handle to a Key என்பதைக் குறிக்கிறது.
1) HKEY_CURRENT_USER இந்த ரெஜிஸ்ட்ரி கீயானது தற்போது கணினியில் லொக்-இன் செய்துள்ள பயனருக்குரிய தகவல்களைக் கொண்டுள்ளது.
2) HKEY_USERS இந்த கீயானது விண்டோஸில் பயனர் கணக்கு உருவாக்கியிருக்கும் அனைத்து பயனர் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்கும்.
3) HKEY_LOCAL_MACHINE இது கணினி பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்டிருக்கும்
4) HKEY_CLASSES_ROOT இங்கு பதியப்படும் தகவல்கள், ஒரு பைலை திறக்கும்போது அதனை எந்த எப்லிகேசனுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களைக் கொண்டுள்ளது..
5) HKEY_CURRENT_CONFIG
டீவைஸ் ட்ரைவர். டிஸ்ப்லே ரெஸ்லுயூசன் மற்றும் எப்லிகேசன்கள் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது.
ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்ய ரெஜிஸ்ட்ரி எடிட்டரை அணுக வேண்டும். அதற்கு ஸ்டாட் மெனுவில் ரன் தெரிவு செய்து Regedit என டைப் செய்யுங்கள் அப்போது Registry Editor விண்டோ தோன்றக் காணலாம்..
Posted in | நேரம் 10:21 AM
Posted in | நேரம் 10:20 AM
ஜிமெயில் காலை வாரினால் ...
Posted in | நேரம் 10:14 AM
தற்போது நாம் முன்னொருபோதும் இல்லாதவாறு ஒன்றோடொன்று பிண்ணிப்பிணைந்த ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது அன்றாட வாழ்வில்ஓர் அங்கமாக கணினிகள் மாறி விட்டதைத் தொடந்து மக்களுக்கியேயானதொடர்பாடல் முறைகளும் மாறியிருப்பதைக் காண் கிறோம்..
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்றுஇணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறுமுறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் பொருத்து இந்தஒவ்வொரு முறையும் அதற்கேயுரிய சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன.
எந்த வகையிலான கணினி வலையமைப்பை உருவாக்கும் போதும் சிலஅடிப்படை விடயங்களைக் கருத்தில் கொள்ள் வேண்டியுள்ளது, உதாரணமாக்வலையமைப்பு உருவாக்கப் போவது கம்பியூடா (wired) அல்லதுகம்பியில்லாமலா (wireless) என்பது. அதேபோன்று ஒரு வலையமைப்பில் முகியபங்காற்றுவது ப்ரொட்டகோல் (Protocol) எனப்படும் தொடர்பாடல் விதிமுறைகளாகும். இரு வேறு பட்ட கணினிகள் தொடர்பாடும் போது இணைப்புமொழியாக் இந்த ப்ரொட்ட்கோல் தொழிற்படுகிறது. தற்போது கணினிவலையமைப்பில் TCP/IP எனும் தொடர்பாடல் விதிமுறையே பயன்பாட்டிலுள்ள்து.. இந்த விதி முறையே உலகலாவிய கணினி வலையமைப்பானஇணையத்திலும் பயன் படுத்தப்படுகிறது.
பைல் மற்றும் வளங்களைப் பாரிமாறிக் கொள்ளும் வசதி, மின்னஞ்சல், கணினிவழி உரையாடல், பேஸ் புக் போன்ற சோஷியல் நெட் வொர்க் (Social Networking) சேவைகள் போன்றன் இன்றைய கணினிகளால் இணைந்து விட்ட உலகின்வியக்கத் தக்க பயன்பாடுகளாக்ப் பரபரப்பாகப் பேச்ப்படுகிறது. உலகம்முழுதுமுள்ள கணினிகளின் வலையமைப்பே இதனைச் சாத்தியமாக்கியது.
இனி விடயத்திற்கு வருவோம். வீட்டிலோ அலுவலகத்திலோ கணினிகளை ஓர்அறையின் மூலையில் வெளியுலக் தொடர்பேதுமில்லால் (Stand alone) தனியாகவைத்துப் பாவிக்கும் காலம் எப்போதோ மலையேறி விட்டது இருப்பது இரண்டேஇரண்டு கணினிகளாயினும் அவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் பயன்படுத்துவதில் பல அனுகூலங்கள் உள்ளன. இரண்டு கணினிகளை இணைத்துஒரு சிறிய கணினி வலயமைப்பை உருவாக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகளும் உள்ளன. அவற்றுள் அதிக செலவில்லாமல் இணைக்கக் கூடியதுக்ரொஸ் ஒவர் (cross-over) கேபல் கொண்டு இணைப்பதாகும். அதன் மூலம்இரண்டு கணினிகளுக்கிடையே பைல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இணையஇணைப்பு மற்றும் ப்ரிண்டர்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்..இணையஇணைப்பைப் பகிர்ந்து கொள்வதாயின் ஒரு கணினியில் இரண்டு நெட்வர்க்கார்டுகளை (Network Interface Card) பொருத்த வேண்டி யிருக்கும். ஒரு கார்டைப்ரோட்பேண்ட் (Broadband) இணைப்புக்கான ரூட்டரிலும் (Router) மற்றொரு கார்ட்அடுத்த கணினியை இணைக்கவும் பயன் படுத்தப்படும்.
ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பைப் ப்கிர வேண்டிய அவசியமில்லை அல்லதுநீங்கள் பயன் படுத்துவது டயல் அப் (Dial up) இணைப்பு எனின் ஒரு கணீனியில்இரண்டு நெட்வர்க் கார்டுகள் தேவைப் படாது.. இரண்டு கணினிகளை இணைப்பதுபைல்களைப் பரிமாற மட்டுமே எனின் இரண்டு கணினிக்ளிலும் ஒவ்வொருநெட்வர்க் கார்ட்இருந்தாலே போதுமானது
.
எனினும் இவ்வாறு இரண்டு கணினிகளை இணைக்கும் போது சிலவரையறைகளும் உள்ள்ன என்பதைக் கவனத்திற் கொள்ள் வேண்டும். உதாரணமாக் இணைய இணைப்பையோ அல்லது ப்ரிண்டரையோ பகிர்ந்துகொள்ளும் போது இரண்டு கணிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும்என்பதையும் மறந்து விடாதீர்கள்,.
இடையில் ஹப் (Hub) , ஸ்விச் (Switch) போன்ற வேறு எந்த சாதனங்களும்இல்லாமல் நெட்வர்க் கார்ட் ஊடாக மட்டுமே இணைப்பதற்கு இரண்டுகணினிகளையும் விசேட cross-over கேபல் பயன் படுத்தப்படுகிறது.. இந்த க்ரொஸ் ஓவர் கேபல் வழமையான (Ethernet) ஈதர்நெட் கேபலிலிருந்து வேறுபட்டது. இத்னை நாமாகவே த்யாரித்துக் கொள்ளவும் முடியும்.
இரண்டு கணினிகளையும் கேபல் கொண்டு இணைத்து விட்டால் மாத்திரம்அவற்றிற்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள் முடியாது. அடுத்தவேலையாக இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரிகளை கீழுள்ளவாறுமாற்றியமைக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் முதல் கணினியில் Start → Settings ஊடாகதெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில் Local Area Network என்பதன் கீழ் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனை மஞ்சள் நிறத்தில்விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும்காண்பிக்கும். அதாவது கணினிகளுக்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ளஇரண்டு கணினிகளும் இன்னும் தயாராயில்லை என்பதையே இது காட்டுகிறது Network Connections
அடுத்து அந்த ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள்., அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General டேபின் கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத்தெரிவு செய்து அதன் கீழுள்ள் Properties பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும்டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்துகீழுள்ள்வாறு அதன் ஐபி முகவரியை மற்றியமையுங்கள்..
முதல் கணினியில் (PC-1) ஐபி முகவரியாக 192.168.0.1 எனவும் இரண்டாவதுகணினியில் (PC-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள். இப்போது இரண்டுகணினிகளையும் இணைத்தாயிற்று, இதனை உறுதி செய்து கொள்ளவேண்டுமானால் மறு படியும் Start → Settings ஊடாக Network Connections தெரிவுசெய்ய் வரும் விண்டோவில் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனில் ம்ஞ்சல் நிறவிழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம். சில வேளை அந்த ஐக்கன் மேல்பூட்டு வடிவில் ஒரு ஐக்கன் இருப்பதை அவதானித்தால் Firewall இயக்கநிலையிலுள்ளது என்பதையே காட்டுகிறது. அவ்வாறிருந்தால் பைல் பரிமாறம்செய்வதை விண்டொஸ் அனுமதிக்காது. அதனை இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் க்ளிக், செய்துதற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுங்கள்.. தற்போது இந்த சிறிய வலையமைப்பில்பைல், போல்டர் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.
IP Address: 192.168.0.1
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1
படங்கள் பிரசுரமாகுமாயிருந்தால்
நிழற் படுத்தப் பட்ட பகுதி அவசியமில்லை இரண்டாவது கணினியிலும் கீழேகாட்டியுள்ளது போன்று ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள்.
IP Address: 192.168.0.2
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1
அதி வேக ப்ரோடபேண்ட் இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்ளவேண்டுமாயின் இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரியை மாற்றியமைக்கும்இடத்தில் “Obtain an IP address automatically” என்பதைத் தெரிவு செய்ய் வேண்டும்.
எனினும் அதிவேக இணைய இணைப்பை இரண்டு கணினிகளுக்கிடையேபகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் நேரடியாக் க்ரொஸ் ஓவர் கேபல் கொண்டுஇணைப்பதை விட இடையில் இரண்டு அல்லது நான்கு போர்டுக்ள் (Ports) கொண்ட ரூட்டர் மூலம் இணைப்பதே சிறந்த வழி முறையாகும். எனினும்அதற்கு க்ரொஸ் ஓவர் கேபலை விட செலவு சற்று அதிகமாயிருக்கும். .என்பதைநினைவில் கொள்ளவும்.
Posted in | நேரம் 10:12 AM
உங்களுக்கு கீழ்கண்டவாறு ஓப்பன் ஆகும்.
இந்த படத்தில் பாருங்கள். Start மெனுவை நான் நடுவில் வைத்துள்ளேன்.
Posted in | நேரம் 10:07 AM
Posted in | நேரம் 9:45 AM
Copyright 2009
dailyraja
Free WordPress Themes
designed by
EZwpthemes
Converted into Blogger Templates by Theme Craft | Falcon Hive