Pages

சூப்பர் கிட் சிவாஜி "ஒரு கூடை சன்லைட்"

"வெள்ளைத் தமிழன்" ஆக்கிய மென்பொருள்
அவ்வப்போது நம்மாட்கள் பிரமாண்டமாய் எதையாவது செய்து அசத்துவது வழக்கம். அவ்வரிசையில் லேட்டஸ்ட் "ஒரு கூடை சன்லைட்" சூப்பர் கிட் சிவாஜி திரைப்பட பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை வெள்ளையாக்கி காட்டி நம் மென்பொருள் வல்லுனர்கள் மகிழ்ந்திருக்கிறார்கள்.மேலும் படிக்க கீழே.Click the Pictures to Enlarge
சென்னை வடபழனியின் ஒரு கோடியில் உள்ள Indian Artists எனும் நிறுவனத்தின் 25 மென்பொருள் படைப்பாளிகள் பிக்ஸல் பிக்ஸலாய் ரஜினி சாரை இரவு பகலாய் செதுக்கி ஓராண்டாய் உழைத்து வெற்றியும் கண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்கள் பயன் படுத்திய மென்பொருளின் பெயர் Digital Fusion. இது eyeon Software Inc எனும் கனடியன் சாப்ட்வேர் நிறுவனத்தின் Visual Effects (VFX) க்கான சிறப்பு மென்பொருளாகும். இம்மென்பொருள் கொண்டு Final Destination II ,Sin City போன்ற படங்களும் எடிட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது
Discreet (AutoDesk) நிறுவனத்தின் Combustion மென்பொருளும் Rising Sun Research நிறுவனத்தின் CineSpace மென்பொருளும் பயன்படுத்தபட்டுள்ளனவாம்.

Jacky எனும் அந்த வெள்ளைக்கார பெண்மணியை Digital Grafting க்காக ஸ்பெயினில் பயன்படுத்தியிருக்கிறார்கள். குளுகுளுவென ரோமமின்றி பளபளவென இருக்க அந்த பெண் ரஜினி சாருக்கு மாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டாராம்.
ஒவ்வொரு தேவையான முக பிக்ஸலும் Rotoscoping மூலம் அந்த பெண்மணியிடமிருந்து ரஜினி சார் முகத்துக்கு மாற்றப்பட்டதாம்.
இருவரையும் ஒரே வேகத்தில் இயக்கவைத்து ஒரே முகபாவனைகளை வரவைக்க Grid Wrapping முறை பயன்படுத்தப்பட்டதாம்.
அப்படி 80% ரஜினிகாந்த் முகமும் ஜாக்கியின் முகத்திலிருந்து பிய்த்துஒட்ட வைக்கப்பட்டதாம்.

ஆறரை நிமிட ஆட்டத்திற்கு இப்படி அட்டகாசமாய் கிராபிக்ஸ்பண்ணியது உலக அளவில் இதுவே முதல் முறையாம். அந்த கிராபிக்ஸ் டீமிற்கு வாழ்த்துக்கள்.
அதுசரி இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும்.

Read Users' Comments (0)

நெட்டை துண்டித்தபிறகும் அந்த இணையதளத்தை பார்வையிட

நெட்டை துண்டித்தபிறகும் அந்த இணையதளத்தை பார்வையிட...

தலைப்பு விநோதமாய் இருந்தாலும் இது ஒரு விதத்தில் சாத்தியமே.எப்படி?.உதாரணமாக ஒரு வலை தளம் அநேக content-களுடன் இருக்கிறதென வைத்துக்கொள்வோம்.ஆன்லைனிலேயே வலைமேய்வது content-களை படிப்பது சில சமயம் செலவு மிக்கதாக இருக்கலாம்.இதை தவிர்க்க இருக்கவே இருக்கிறது வலைதள ரிப்பர் எனப்படும் Web Site Rippers or We Site Copiers.இம்மென்பொருள் நீங்கள் குறிப்பிடும் வலைதளத்தை முழுதாக உறிஞ்சி உங்கள் கணிணியில் வைத்துக்கொள்ளும்.அப்புறமாக நீங்கள் நெட்டை துண்டித்தபிறகும் அந்த இணையதளத்தை பார்வையிட படிக்க அது உதவும்.ஆன்லைனில் ரொம்ப படிப்பவர்களுக்கு இம்மென்பொருள் மிக்கவே உதவலாம்.
http://www.httrack.com/
Yes u can browse offline.நினைவிருக்கட்டும் இது ஒரு இலவச மென்பொருள்.

Read Users' Comments (0)

நிலவுக்கும் ஐபி

நிலவுக்கும் ஐபி

கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் "IP Addreess தட்டுப்பாடு - ஐபி அட்ரெஸ் பெறும் புது வடிவம் - IPv6" எனும் தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன். அதாவது தற்கால IPv4-கள் (எகா:192.168.1.0) போதுமான அளவு ஐபி அட்ரஸ்கள் கொண்டிராததால் IPv6 (எகா:2016:0fe8::0000:0000:0000:1975:69bf)-க்கு நாம் போயாக வேண்டியுள்ளது என குறிப்பிட்டிருந்தேன்.

நண்பர் கூத்தாடி அவர்கள் NAT,CIDR,புராக்ஸி போன்ற விலாசம் மாற்றும் நுட்பங்கள் இப்போதைக்கு இருப்பதால் அப்படியெல்லாம் அவசரம் ஒன்று மில்லை என விரிவாக பின்னூட்டமும் இட்டிருந்தார்.அது முழுக்க முழுக்க உண்மையும் கூட.

இப்போது IPv6 பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

பழைய IPv4-ஆனது 32 பிட் முறையாலானது.புதிய IPv6-ஆனது 128 பிட் முறையாலானது.

அப்போ IPv5-என்ன ஆனது என கேட்கிறீர்களா? 1970-களில் உருவாக்கப்பட்ட Internet Stream எனும் Protocol-க்கு பெயர் தான் IPv5.எனவே IPv4 க்கு அடுத்து TCPIP புரோட்டோகால் IPv6 ஆனது.

IPv6 -க்கு இன்னொரு பெயர் கூட உண்டு.IPng அதாவது அதன் விரிவாக்கம் Internet Protocol next generation.

அமெரிக்க அரசின் அனைத்து கணிணி வலைகளும் வரும் ஜுன் 30 2008-க்குள் முற்றிலும் IPv6 மயமாக்கப்பட திட்டம் போய்க்கொண்டிருக்கின்றது.

பழைய IPv4 மூலம் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஐபிவிலாசம் கூட கொடுக்கமுடியாது.ஆனால் புதிய IPv6 மூலம் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் 50000000000000000000000000000 ஐபிவிலாசங்கள் கொடுக்கமுடியும்.

இந்த IPv6 மூலம் விண்ணிலுள்ள நம் மூளைக்கு எட்டியவரையுள்ள அனைத்து வான நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொன்றுக்கும் 7000000000000000 ஐபி அட்ரஸ் கொடுக்கலாமாம்.அடேங்கப்பா.

இனி கார், ஐபாட், ஃபிரிட்ஜ், டிவி, மணிபர்ஸ், போன், பேக், கீசெயின் என கண்ட கண்ட பொருள்களுக்கும் ஐபி அட்ரஸ்கொடுத்தாலும் மனிதகுலம் உள்ளவரை IPv6-தான் அரசாளும் போல் தெரிகின்றது.

Read Users' Comments (0)

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்:

கணினி தகவல்கள்

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்:





கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர்
முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது.
இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு
தரப்படுகின்றன:


1.
மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக்
காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள்,
டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில்
பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.

2.
தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில்
கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா
எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம்
பெயர்ந்திருக்கலாம்.

3.
மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால்
டிஸ்பிளே கார்டில் பிரச்சினை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப
பொருத்தவும். பிரச்சினை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டிய திருக்கும்.

4.
மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம்
செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக்
செய்திடவும்.

5.
தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக்காட்டாக உங்கள்
விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது
ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல்
அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.

6.
பிளாப்பி டிஸ்க் டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது:
டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா
என்று பார்க்கவும்.

7.
மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள்
தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு
மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.

8.
பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி
உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச்
சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.

[size=12]9.CMOS Error [/size]என்று செய்தி வருகிறது:
மதர் போர்டில் உள்ள
3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும்.
அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன்
தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.

[size=12]10. FDD Error [/size]காட்டுகிறது,
பிளாப்பி டிரைவ் சரியாகச் செயல்படவில்லை: எப்.டி.டி.யின் பவர் கார்ட்,
டேட்டா கேபிள் சரியாக அதன் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்று
பார்க்கவும். சீமாஸ் செட்டிங்ஸ் சரி பார்த்துவிட்டு பிளாப்பி டிரைவும்
சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.

11. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது.
பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதா என்று
பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா
கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ்
செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா
எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும்.
இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.

12.
சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:
எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை
செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி
செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு.
மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர்
காட்டப்படும்.

13.
மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப்
பொருத்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே
புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை
இருக்கலாம்.

14.
திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.

15.
சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின்
இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர்
கேபிளைச் சோதிக்கவும்.

16. Non System Disk Error: :
பிளாப்பி டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது
ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட்
டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்
பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.
[size=12]17. Missing Operating System: [/size]சிடம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் [size=12]IO.sys, MS_DOS.sys [/size] ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.

18. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம்.

19. IO Error : சீமாஸ்
செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக
இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம்
சரியானதல்ல.
[size=12]

20.Divide Over Flow
[/size]
எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். [size=12]CHKDSK/F[/size] அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.

21. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து
சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும்.
ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

22.
ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிர்ர்கிர்றது:
[size=12]CHKDSK/F
[/size]
அல்லது [size=12]SCANDIS[/size] பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதனை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.

23. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.

24. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.

25. MMX/DLL FILE MISSING : இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும். உங்களுடையது பழைய விண்டோஸ் ௯௮ ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனில் அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும்.

பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம்
நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக
நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம்
தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால்
கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான
டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.

Read Users' Comments (0)

கம்ப்யூட்டருக்குப் புதியவரா நீங்கள்

கம்ப்யூட்டருக்குப் புதியவரா நீங்கள்

வேர்டில் சொல் கண்டுபிடித்து மாற்று

வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் தயாரித்த பின்னர் எடிட் செய்கையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சொல் ஒன்றுக்குப் பதிலாக இன்னொரு சொல் ஒன்றினைப் போட விரும்புகிறீர்கள். அப்போது கர்சரை ஒவ்வொரு லைனாக இழுத்துச் சென்று அந்த சொல்லைத் தேடி அதை அழித்துவிட்டு மீண்டும் புதிய சொல்லை டைப் செய்வது நம் நேரத்தை வீணடிக்கும் செயலாக இருக்கும்.

இதற்கெனவே வேர்ட் தொகுப்பில் Find and Replace என்றொரு வசதி உள்ளது. முதலில் அந்த சொல்லைத் தேட வேண்டிக் கொடுக்கும் கட்டளையைப் பார்க்கலாம். இதற்கு Edit மெனு சென்று அதில் Find கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதற்கென உள்ள Ctrl+F என்ற ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தவும். இப்போது எந்த சொல்லைத் தேட என்று கேட்டு அதற்கென ஒரு நீள் கட்டம் இருக்கும். அதில் கர்சர் துடித்துக் கொண்டிருக்கும். அதில் தேடி அறிய வேண்டிய சொல்லை டைப் செய்திடலாம். இந்த சொல் 255 கேரக்டர்களுக்குள் இருக்க வேண்டும். இது ஒரு எழுத்தாகவோ,சொல்லாகவோ அல்லது நிறுத்தக் குறிகளாகவோ, ஸ்பெஷல் கேரக்டர்களாகவோ இருக்கலாம். அதன்பின் Replace என்ற கட்டத்தில் எந்த சொல்லைப் புதிதாய் அமைக்க வேண்டுமோ அதனை டைப் செய்திடலாம்.

பின்னர் கீழே உள்ள கட்டங்களில் Next என்ற கட்டத்தில் கிளிக் செய்தால் அடுத்த சொல் இருக்குமிடத்தில் கர்சர் செல்லும். நீங்கள் விரும்பினால் அந்த சொல்லுக்குப் பதிலாக புதிய சொல்லை அமைக்க Replace என்பதில் அழுத்த வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு இடமாக அந்த சொல்லைத் தேடித்தேடி மாற்றி அமைக்காமல் அனைத்து இடங்களிலும் அமைக்க முடிவு செய்தால் Replace All என்பதில் கிளிக் செய்தால் போதும். உடனே அனைத்து இடங்களிலும் தேடி அறிந்த சொல்லுக்குப் பதிலாக புதிய சொல் அமைக்கப்பட்டு டாகுமெண்ட் ரெடியாகும்.

டெக்ஸ்ட்டை டேபிளாக மாற்ற

வேர்ட் டாகுமெண்ட் டில் டைப் செய்யப்பட்ட சொற் களை ஒரு டேபிளுக்குள் கொண்டு வரலாம். அதாவது சொற்கள் தாமாக சில வரிசைகளுக்குள் அமைக்கப்படும். இதில் சொற்களுக்கு இடையே கமாக்களை அமைத்தால் அவை டேபிள் அமைக்கும் போது சொற்களைப் பிரிக்கும் அடையாளங்களாகச் செயல்பட்டு டேபிளில் வரிசையாக அமைக்கும். முதலில் எந்த சொற்களைப் பிரித்து டேபிளில் அமைக்க வேண்டுமோ அவற்றிற்கு இடையே டேப் பட்டன் தட்டி இடைவெளி உருவாக்கவும். அல்லது கமா டைப் செய்திடவும். பின் டேபிள் மெனு சென்று அதில் "Convert" கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மேலும் ஒரு துணை மெனு கிடைக்கும். இந்த மெனுவில் "Convert text to Table" என்ற கட்டளையில் கிளிக் செய்திடவும். இப்போது "Convert Text to Table" என்ற டயலாக் பாக்ஸ் தரப்படும். இதில் எத்தனை நெட்டுவரிசை (columns) என்பதையும் டெக்ஸ்ட்டை எது பிரிக்க வேண்டும் என்பன போன்ற கேட்டுள்ளவற்றை அமைக்கவும். பின் ஓகே பட்டன் கிளிக் செய்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் டேபிள் ஒன்றில் அமைக்கப்பட்டு காட்சியளிக்கும்.

டேபிளை டெக்ஸ்ட்டாக மாற்ற

வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை அழகாக உருவாக்கி அதில் டேட்டாக்களையும் டைப் செய்த பின்னர் அதில் உள்ள சொற்களையும் பிற டேட்ட õவினையும் டெக்ஸ்ட்டாக கட்டங்கள் ஏதுமின்றி மாற்றலாம். இதற்கு சம்பந்தப்பட்ட டேபிளை முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். பின்னர் Table மெனுவில் இருந்து Convert என்னும் கட்டளையை தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் சப் மெனுவில் "Convert Table to Text" என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் தேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்தபின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடினால் டேபிள் டேட்டாக்கள் டெக்ஸ்ட்டாக மாறி இருப்பதனைப் பார்க்கலாம்

Read Users' Comments (0)