Pages

கம்ப்யூட்டர் வைரஸ் :அறிவது எப்படி?


கம்ப்யூட்டர் வைரஸ் :அறிவது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்படி அறிவது? நிச்சயம் நான் வந்துவிட்டேன் என்று இப்போதெல்லாம் வைரஸ் பைல் அறிவிப்பு வருவதில்லை.


ஆரம்ப காலத்தில் பி.சி.ஸ்டோன் என்று ஒரு வைரஸ் டாஸ் இயக்கத்தில் வந்தது. அந்த வைரஸ் உள்ளே புகுந்து இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் கம்ப்யூட்டர் கற்களால் தாக்கப்பட்டுள்ளது என்று கல் மழை பொழியும் காட்சியைத் திரையில் காட்டும். பின் அந்த காட்சியைத் தான் பார்க்க முடியும். வேறு எதுவும் வேலை பார்க்க முடியாது.

சில வேளைகளில் நாம் வைரஸ் இணைந்த அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட பைல் ஒன்றை இயக்குவோம். வைரஸ் கம்ப்யூட்டர் உள்ளே புகுந்து கொள்ளும். ஆனால் அப்போது நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் அதன் பின் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பல மாறுதல்கள் தெரியும். அதனைக் கொண்டு நம் கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துள்ளது என அறியலாம். அத்தகைய மாறுதல்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.


1.
முதலில் வழக்கத்திற்கு மாறாக உங்கள் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும்.


2.
ஒரு சில கட்டளைகளுக்குப் பணிந்து விட்டு பின் கம்ப்யூட்டர் இயங்காமல் அப்படியே உறைந்து போய் நிற்கும். இந்நிலையில் என்ன நடக்கிறது என்ற பிழைச் செய்தி கிடைக்காது. ஒரு சில வேளைகளில் இந்த பிழைச் செய்தி கிடைக்கலாம்.

3. உங்கள் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி உடனே தானே ரீ பூட் ஆகும். இது ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை தானே நடக்கும். ஏனென்றால் உங்கள் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி சிஸ்டத்தினை கம்ப்யூட்டர் உள்ளே வந்துள்ள வைரஸ் உடைக்க முயற்சிக்கிறது. அப்போது விண்டோஸ் தானாக ரீபூட் செய்கிறது. ஆனால் அவ்வாறு ரீபூட் ஆன பின்னரும் அது முடங்கிப் போய் நிற்கும்.
4.
ஹார்ட் டிஸ்க்கில் உள்ள டேட்டா உங்களுக்குப் பிரச்சினையைத் தரலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கை அணுக முடியாமல் போகலாம்.
5.
திடீர் திடீர் என தேவையற்ற பிழைச் செய்தி வரலாம். உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் உள்ளது. இலவசமாக ஸ்கேனிங் செய்து தருகிறோம் என்று ரிமோட் கம்ப்யூட்டரிலிருந்து செய்தி வரும். இதன் மூலம் வைரஸை அனுப்பி உங்கள் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேறு ஒருவர் தன் கம்ப்யூட்டர் மூலம் முயற்சிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

6. கம்ப்யூட்டரில் கிடைக்கும் மெனுக்களும் டயலாக் பாக்ஸுகளும் கன்னா பின்னா என்று தெரிகிறதா? வைரஸ் பாதித்ததன் அடையாளம்தான் இது.

7. கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அப்ளிகேஷன் சாப்ட்வேர் அனைத்தின் இ.எக்ஸ்.இ. பைல்கள் அங்கும் இங்குமாய் பல நகல்களில் இருக்கும். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் ஐகான்களில் கிளிக் செய்தால் அதற்கான புரோகிராம் இயங்காது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளெல்லாம் பொதுவாக தற்போது உலா வரும் வைரஸ்களினால் ஏற்படும் மாற்றங்கள். இன்னும் பல வகைகளில் வைரஸ் பாதிப்பினை கம்ப்யூட்டரில் அறியலாம். வழக்கமான வகையில் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் இன்டர்நெட் இணைப்பில் மாறுதல் இருந்தால் உடனே எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.

முதலில் உங்கள் டேட்டா அனைத்தையும் பேக் அப் எடுத்துவிடுங்கள். ஆண்டி வைரஸ் தொகுப்பினை அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள். நேரம் கிடைக்கும்போது மாதம் ஒரு முறையாவது ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி அனைத்து டிரைவ்களையும்

சோதித்துவிடுங்கள்.

Read Users' Comments (0)

போல்டருக்கு பாஸ்வோர்ட் கொடுப்பது எப்படி..?



போல்டருக்கு பாஸ்வோர்ட் கொடுப்பது எப்படி..?

சமீபத்தில் Tamilhackx என்ற வலைப்பூவில் போல்டருக்கு வேறு மென்பொருளைபயன்படுத்தி கடவுச்சொல் கொடுப்பது பற்றி எழுதப்பட்டிருந்தது. அனால் எந்தமென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் முடியும். (மற்ற வின்டோஸ் தொகுப்பிற்கு சில ஷேர்வேர் புரோகிராம் மூலம் பாஸ்வேர்ட் கொடுக்கலாம்) உங்கள் ஹார்ட் டிஸ்க் என்.டி.எப்.எஸ்., முறையில் பார்மட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அப்படித்தான் செய்திருக்கப்படும். இனி எந்த போல்டரை உங்களுடையதாக மட்டும் ஆக்கிட வேண்டுமோ அதில் ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் ஷேரிங் என்ற டேபைக் கிளிக் செய்தால் “Make this folder private” என்ற பெட்டி தெரியும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் அப்ளை (Apply) என்ற பட்டனை அழுத்தவும். உங்களுடைய கம்ப்யூட்டர் அக்கவுண்டிற்கு தனியாக பாஸ்வேர்ட் இல்லை என்றால் கம்ப்யூட்டர் உங்களிடம் இந்த போல்டருக்கு பாஸ்வேர்ட் கேட்கும்.

பாஸ்வேர்ட் கொடுத்து உறுதி செய்தபின் “Create Password” என்ற பட்டனை அழுத்தி பின் பாஸ்வேர்ட் விண்டோவினை மூடவும். பின் புராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸில் ஓகே அழுத்தி மூடவும். இனி பாஸ்வேர்ட் தராமல், நீங்கள் உட்பட, இந்த போல்டருக்குள் நுழைய முடியாது. எனவே, நீங்களும் இந்த பாஸ்வேர்டைச் சரியாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Read Users' Comments (0)

வயர்லஸ் கேமரா....!


புதிய வயர்லஸ் கேமரா....!
இப்போது நீங்கள் யாரையாவது ரகசியமாக அவருக்கு தெரியாமல் அவருடை நடவடிக்கையை கண்காணிக்க வேண்டுமா? இதோ வந்துவிட்டது ஒயர்லெஸ் வீடியோ கேமரா. இதன் மூலம் நீங்கள் எங்கிருந்தபடியும் கண்காணிக்கலாம். தேவைப்பட்ட இடத்தில் பசை போட்டு, இந்த கேமராவை ஒட்டி விட்டால் மட்டுமே போதுமானது.

நெட்வொர்க் வசதி மூலம், எங்கிருந்தும் வீடியோவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க முடியும். நவேடாவில் உள்ள லாஸ் வேகாசில் நடந்த நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில், இந்த நவீனவீடியோகேமராகாட்சிக்குவைக்கப்பட்டது.
இந்த கேமராவைப் பயன்படுத்துவோர், எங்கிருந்தபடியும், தங்கள் குடும்பத்தில், நிறுவனத்தில் நடப்பவற்றை கண்காணிக்க முடியும். தற்போது, சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டு வரும் இந்த கேமரா, இன்னும் ஆறு மாதத்தில் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு கொண்டுவரப்படஉள்ளது.
இந்த கேமராவின் தொழில் நுட்ப முறை, 'அவாக்' என்று அழைக்கப் படுகிறது. இந்த கேமரா மிகவும் சிறிய வடிவிலானது; பேட்டரியில் செயல்படக் கூடியது. ஒயர்லெஸ் வீடியோ கேமராவாகவும், புகைப்படக் கருவியாகவும் இதை பயன்படுத்தலாம். இதை சுவர்களிலோ, வேறு இடங்களிலோ பசை போட்டு ஒட்டி வைத்து விட்டால்போதுமானது.
இணைய தளத்தின் அடிப்படையில், இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கண்காணிக்க முடியும். இதை தினமும், 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என்பது இன்னொரு சிறப்பம்சம். இதை பொருத்துவது மிக மிக எளிதானது. இதை பொருத்துவதற்கு ஒயர்கள் தேவையில்லை; புதிதாக சாப்ட்வேர் இணைக்கத் தேவையில்லை.

Read Users' Comments (0)

பயர்வால்கள்

பயர்வால்கள் (Firewalls) எப்படி செயல்படுகின்றன?

உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.


இன்டர்நெட்டில் நம் கம்ப்யூட்டரை இணைத்து செயல்படுகையில் அது பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இணைந்த நெட் வொர்க்குடன் இனைந்து செயல்படுகிறது. இதனால் இந்த நெட்வொர்க்கில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களில் இருந்தும் உங்கள் கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தித்தான் பல விஷமிகள் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களைத் திருட முயற்சிக்கிறார்கள். அல்லது வைரஸ் புரோகிராம்களை அனுப்பி நம் கம்ப்யூட்டரில் நாசம் விளைவிக்கிறார்கள். இந்த முயற்சியில் ஈடுபடுவோர் எப்போதும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ந்து செயல்படுகின்றனர்.



இவர்களிடமிருந்து நம் கம்ப்யூட்டரை மூன்று வழிகளில் பாதுகாக்கிறோம்.

1. வைரஸை அண்டவிடாமலும் அப்படி வந்துவிட்டால் அவற்றை நீக்கும் செயலையும் மேற்கொள்ளும் ஆண்டி வைரஸ் எனப்படும் புரோகிராம்கள்.

2. உள்ளே இது போன்ற எந்த நாசம் விளைவிக்கும் புரோகிராமினையும் புகவிடாமல் தடுக்கும் பயர்வால் புரோகிராம்கள்.

3.ஸ்பைவேர் அழித்தல்.

இந்த மூன்று வகை புரோகிராம்களும் இன்றைக்கு ஒரு கம்ப்யூட்டருக்குத் தேவை. இதன் முக்கியத்துவம் ஒன்றுக்கொன்று வேறுபடலாம். இங்கு பயர்வால்கள் என்ன செய்கின்றன என்று பார்க்கலாம்

உங்களுக்கும் இன்டர் நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.

பயர்வால் தொகுப்பைப் பொறுத்தவரை இரண்டு வகை உண்டு:ஹார்ட்வேர் பயர்வால் மற்றும் சாப்ட்வேர் பயர்வால்.



அதிகம் புழங்கப்படும் ஹார்ட்வேர் பயர்வால் ரௌட்டராகும் (router).ஒரு சிறிய நெட்வொர்க்கில் இது கம்ப்யூட்டருக்கும் மோடத்திற்கும் இடையே இணைக்கப்படும். உங்களுக்கு இன்டர்நெட் தொடர்பினைத் தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் உங்கள் கம்ப்யூட்டருக்கென ஒரு ஐ.பி. முகவரியினைத் தரும். இது தெரிந்தால் யாரும் இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் புகுந்து தகவல்களைத் திருட முடியும். இந்த ரௌட்டர் அதனை மற்றவர்களிடமிருந்து மறைத்து வேறு ஒரு முகவரியை இணைக்கப்பட்ட கம்ப்யூட்டருக்குத் தருகிறது. இதன் மூலம் கம்ப்யூட்டரில் எளிதாக நுழையக் கூடிய போர்ட்களை ரௌட்டர் மூடிவிடுகிறது.

சாப்ட்வேர் பயர்வால் சிறிது மாறாகச் செயல்படுகிறது. இதில் சில நன்மைகளும் உள்ளன; பிரச்னைகளும் உள்ளன. ஹார்ட்வேர் பயர்வால் கம்ப்யூட்டருக்கு வெளியே அமைக்கப்படும் சாதனம். சாப்ட்வேர் பயர்வால் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படும் புரோகிராம். எது எப்படி இருந்தாலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதாவது ஒரு பயர்வால் கட்டாயம் தேவை.

சாப்ட்வேர் பயர்வால் உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாக இயங்குகிறது. இதனால் நீங்கள் இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் புராசசர் வேகம் சற்று குறையலாம். சாப்ட்வேர் பயர்வால் ரௌட்டர் செய்வது போல ஐ.பி.முகவரி மாற்றம் எதனையும் மேற்கொள்ளாது. சாப்ட்வேர் பயர்வால் செயல்படுவது ஒரு நண்பரை வாட்ச்மேனாக வைத்திருப்பது போல.

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் எந்த புரோகிராமினை நாம் இன்டர்நெட்டில் தொடர்பு கொண்டாலும் உடனே சிறிய பாக்ஸ் ஒன்றை உருவாக்கி இந்த ஐ.பி. முகவரியிலிருந்து இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்திட முயற்சிக்கிறது. இதனை அனுப்பவா? என்று கேட்கும். நீங்கள் அனுமதித்தால் தான் அதனை அனுமதிக்கும்.

இது கெடுதலான புரோகிராமிற்கு மட்டுமல்ல. நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் அனைத்து புரோகிராம்களுக்கும் இந்த செய்தி கிடைக்கும். ஒரு முறை ஒரு புரோகிராமினை அறிந்து கொண்டு அதனை நீங்கள் அனுமதிப்பதையும் பதிந்து கொண்டு அடுத்த முறை அதே வெப் சைட்டை நீங்கள் தொடர்பு கொள்கையில் உங்களைக் கேட்காமலேயே அனுமதிக்கும்படியும் இதனை செட் செய்திடலாம்.

வேறு எவராவது அவர்களின் புரோகிராம் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் திருட்டுத் தனமாக நுழைய முயற்சிக்கையில் இந்த ஐ.பி. முகவரியிலிருந்து ஒருவர் உங்கள் கம்ப்யூட்டருக்குள் முயற்சிக்கிறார் என்று எச்சரிக்கைச் செய்தியினை பயர்வால் வழங்கும். அப்படிப்பட்ட நேரத்தில் அதனைக் குறித்து வைத்துக் கொண்டு உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த முகவரியிலிருந்து ஒருவர் என்னுடைய கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கிறார் என நீங்கள் தெரிவிக்கலாம்.

பயர்வால் என்பது இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவருக்கும் தேவயான ஒன்று. எனவே இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் பயர்வால் ஒன்றை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது நல்லது. அல்லது நிறுவனங்கள் விற்பனை செய்திடும் பயர்வால் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தலாம். விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பில் பயர்வால் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு சிறிய அளவில் தான் இயங்குகிறது.

Read Users' Comments (0)

திருமணம்


உடல் சொல்லும் உண்மைகள்!

பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை திருமணம்.

பெண்களுக்கு 18,19 வயதிலேயே திருமண ஆசை தலை தூக்கலாம். ஆனாலும் 20 முதல் 24 வயதுவரையிலான கால கட்டமே திருமணத்திற்குச் சரியான பருவம்.

திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே இத்தனை வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆணுக்கும், பெண்ணுக்கும் மனதளவிலும் தாம்பத்திய உறவிலும் மகிழ்ச்சி ஏற்படுத்தும் நிலைமையே சரியான திருமணம். ஆனாலும் பொதுவாக இருவருக்கும் ஐந்து முதல் எட்டு வயது வரை வித்தியாசம் இருந்தால் நல்லது.

திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் கீழ்க்கண்ட விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சொந்தத்தில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உறவு விட்டுப் போகக் கூடாதே என்றோ, சொத்துக்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ சொந்தத்தில் திருமணம் செய்து வைப்பது நம் நாட்டில் சகஜமான விஷயம். இரத்த உறவினர்களைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தாய்க்கோ, தந்தைக்கோ உள்ள வேண்டப்படாத மரபணு அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். சில சமயம் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சியின்றி பிறக்கவோ, குறைப் பிரசவம் நிகழவோ கூடும். பெற்றோருக்கு இதை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது சம்பந்தப்பட்ட பெண்ணின் கடமை.

எக்காரணம் கொண்டும் திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவுகளில் ஈடுபடக் கூடாது. செக்ஸைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் காலத்துப் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்த்து அனுபவரீதியாக தெரிந்து கொள்ள நினைக்கவே கூடாது. அதனால் கருத்தரிக்கும் நிலை ஏற்பட்டாலோ, அதை கலைத்து விட்டாலோ அவை மூலம் ஏற்படும் மன அதிர்ச்சி, அவளது வாழ்க்கை முழுவதும் தொடரும். எப்படி எவ்வளவு ஜாக்கிரதையாகப் பழகினாலும், இந்த விஷயத்திற்குத் தன்னை விட்டுக் கொடுக்கும் பெண்,பிறகு அந்த வாலிபனையே மணந்து கொண்டாலும்,அவனிடம் சுய மதிப்பை இழந்து விடுவாள். காரணம் திருமணத்துக்கு முன்பே இவள் நம்மோடு படுக்கையை பகிர்ந்து கொண்டவள் தானே என்ற எண்ணம் கணவனுக்கு ஏற்பட்டிருக்கும்.

திருமண வாழ்க்கை என்பது பெண்களைப் பொறுத்த வரை முற்றிலும் மாறுபட்ட புதியதோர் உலகம். எனவே இந்த வாழ்க்கையின் மூலம், தான் இழக்கப் போகிறவற்றையும் பெறப்போகிறவற்றையும் உணர்ந்து உடலளவிலும்,உள்ளத்தளவிலும் பக்குவமடைய வேண்டும் அவள்

Read Users' Comments (0)

மனித நேயம்…?


மனித நேயம்…?


பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பைச் செலுத்தியவர். அதுபோல் திருவள்ளுவர்

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

என்று அன்புணர்வின் உன்னதத்தை சித்தரிக்கிறார்.

உயிரோடு கூடிய உடம்பு அன்பு வழியில் இயங்குவதாகும். அவ்வன்பில்லாதவர்களுக்கு உள்ள உடம்பானது எலும்பைத் தோலால் போர்த்திய வெற்றுடம்பாகும்.

மேலும், கனியன் பூங்குன்றனார்

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகளாவிய அறைக்கூவலை விடுக்கிறார்.

மதங்கள் அனைத்தும் அன்பையே முதன்மைப் படுத்தி போதிக்கின்றன. அன்பே கடவுள் என்கின்றன. ஆனால் மனிதன் நாகரிகம் வளர வளர புற உலக வாழ்க்கையில் ஈடுபட்டு தன்னை மறந்தான். பொருளாதார போராட்டத்தில் மனித நேயம் பறந்து போயிற்று.

எதிலும் ஒரு எதிர்பார்ப்பு கொண்டு வாழ்கிறான். இதனால் பரிசுத்தமான அன்பைக் கூட பாசாங்கு போலவே நினைக்கத் தோன்றுகிறது.

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் பெரியோர்கள், ஞானிகள், சித்தர்கள் வாழ்ந்த நம் தேசத்தின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது.

மனித நேயத்துடன் செயல்படுபவர்கள் போல் செயல்பட்டு சிலர் மக்களை ஏமாற்றுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு அண்டை வீட்டாரின் தொடர்புகள் சொல்லும் அளவுக்குக்கூட இல்லை. யாரோ வேற்றுக் கிரக மனிதனைப் பார்ப்பதுபோல் பார்க்கின்றனர். வீட்டிலுள்ள பெரியவர்களை சுமையாகக் கருதுகின்றனர். பெரியோர்களை மதிக்கும் தன்மை அறவே இல்லை. மனித வாழ்க்கையின் பாதி நேரம் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி முன்னே கரைந்து போய்க்கொண்டிருக்கிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வு மனித நேயத்தை அழிக்கும் கிருமியாக வளர்ந்து வருகிறது.

இந்த நிலைக்குக் காரணம் பெரியோர்கள், வீட்டிலிருக்கும் மூத்தவர்களின் வழிகாட்டுதல் இல்லாமையே.

பழங்காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர். பெரியோர்கள் தங்களின் அனுபவ உண்மைகளை ஆராய்ந்து சொல்லும் அறிவுரைகள் எல்லாம் நலம் பயப்பதாகவே இருந்து வந்தது. இதனால் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அனைவரிடமும் அனுசரித்து நட்பு பாராட்டி சிறந்த பண்புடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றோ குழந்தை பிறந்தவுடன் கிரச் (குழந்தைகள் காப்பகம்) சுக்கு அனுப்பிவிடுகின்றனர். அந்த குழந்தைகள் பெரியோர்களின் அன்பில் அரவணைப்பில் வாழவில்லை. பெரியோர்கள் குழந்தைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். அனால் அவர்களுடன் அன்பு பாராட்ட நேரமில்லாமல் இருக்கின்றனர்.

மனிதனை மனிதனாக மதிப்பதில்லை. ஒருவரை ஒருவர் நம்பும் சூழ்நிலை இல்லை. அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மறக்கப் பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன. மனித மனமானது அதிக வருமானம், கட்டுக்கட்டாய்ப் பணம், பேராசை, முறைகேடான உறவுமுறைகள், பதவி மோகம், கேளிக்கை விளையாட்டுகள் என ஒரு ஆடம்பரமான வாழ்க்கையைத் தேடி ஒரு வேட்டை நாயைப்போல அலைகிறது. ஆரறிவு படைத்த மனிதர்கள் உறவுகளை மறந்து, அன்பை மறந்து அரக்கத்தனமான வாழ்க்கைக்கு ஆயத்தமாகி விட்டனர்.

இதுபோல் இன்று நாளிதழ்களை புரட்டினாலே கொலைச்சம்பவங்கள் பற்றிதான் அதிகம் இருக்கின்றன. போதிய அன்பு கிடைக்காமலும், மனிதத் தன்மை இல்லாமலும் இருப்பதால் ஏற்படும் விபத்துக்கள்தான் இவை. இந்நிலை மாற, எதிர்கால சமுதாயத்தை வலுவாக உருவாக்க பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு அன்பு, நேசம், பிறருக்கு உதவும் தன்மை போன்றவற்றை எடுத்துக் கூறிவரவேண்டும். பெரியோர்களை மதிக்கச் செய்யவேண்டும். பள்ளிகள் வெறும் பாடங்களைப் போதிக்கும் கூடங்களாக அல்லாமல் பாடத்துடன் மனித நேயத்தையும் போதிக்கும் ஒரு கல்விச் சோலையாக மாறவேண்டும். நமது புராணங்களில் வரும் கதாபாத்திரங்களையும், குட்டிக் கதைகளையும் சொல்லி அதிலுள்ள நல்ல விஷயங்களை அவர்களுக்கு புரிய வைத்தால் எதிர்கால சமுதாயம் மனித நேயம் மிக்க சமுதாயமாக மாறும்.

பக்கத்துவீட்டுக் காரர்கள், அண்டைவீட்டுக் காரர்களுடன் உறவு பாராட்ட வேண்டும். இன்றும் கிராமங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவுவதைப் பார்த்திருக்கலாம். படித்த நகர மக்களிடையே மனித நேயம் வளரவேண்டும். குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை குறைக்க வேண்டும். இயற்கையின் அற்புதங்களைப் பற்றி எடுத்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தால் மனித நேயத்துடன் இயற்கையையும் காக்கும் காவலர்களாக எதிர்கால சமுதாயம் விளங்கும் என்பது நிதர்சனமான உண்மை.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற தத்துவக் கோட்பாட்டின்படி மக்கள் வாழ்ந்தால் மனித நேயம் தழைத்தோங்கும்.

Read Users' Comments (0)

நரசிம்மருக்கு இப்படியும் ஒரு பெயர்


சித்தர்களில் ஒருவரான இடைக்காடரிடம் சில பக்தர்கள் பெருமாளின் அவதாரங்களில் உங்களுக்குப் பிடித்த மூன்று அவதாரங்களைச் சொல்லுங்கள். அவரையே நாங்கள் வழிபட விரும்புகிறோம்” என்றனர்.


உடன் இடைக்காடர் அவர்களிடம் “ஏழை, இடையன், இளிச்சவாயன்.. இவர்களை வணங்கி திருவிழா கொண்டாடுங்கள்.. உங்களைத் துன்பம் நெருங்காது..” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.


அவர் சொல்லியதன் விளக்கம் இதுதான்.


‘ஏழை’ என்பது ராமனையும், ‘இடையன்’ என்பது கண்ணனையும், ‘இளிச்சவாயன்’ என்பது நரசிம்மரையும் குறிக்கும்.


ராமன், தசரத சக்கரவர்த்தியின் மகனாகப் பிறந்தவர். ஆனாலும், தந்தையின் சொல் கேட்டு வனவாசம் சென்று ஏழையாகவே வாழ்க்கை நடத்தினார்.


அவரே கிருஷ்ணாவதாரத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாகப் பிறந்தார்.


நரசிம்ம அவதாரத்தில் உக்கிரத்துடன் தன் வாயைத் திறந்து இரணியனை சம்ஹாரம் செய்தார். இதை ‘இளித்தவாயன்’ எனக் குறிப்பிட்டார். ‘இளித்த’ என்றால் ‘வாயைத் திறந்த’ என்றும் பொருள் உண்டு.

‘சத்யமேவ ஜயதே’ சரியான சொல்தானா?

அசோகச் சக்கரத்தின் கீழ் ‘சத்யமேவ ஜயதே’ என எழுதப்பட்டுள்ளது. ‘வாய்மையே வெல்லும்’ என்பது இதன் தமிழாக்கம்.

இது சரியான சொற்றொடரா என்றால், "இல்லை" என்பதுதான் பதில்.

‘சத்யமேவ ஜயதி’ என்பதுதான் சரியான சொல்.

ஆனாலும், அந்தக் கால ரிஷிகளுக்கு அக்காலத்தில் சில வார்த்தைகளை இனிமை கருதி மாற்றுவதற்காக அனுமதிக்கப்பட்டதாம். இந்த முறைக்கு ‘அர்ஷப் பிரயோகம்’ என்று பெயர்.


இந்தப் பிரயோகத்தை ரிஷிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். சாதாரண மனிதர்கள் பயன்படுத்தக் கூடாது.


‘சத்யமேவ ஜயதே’ என்பது ரிஷிகளின் வேதவாக்கு. எனவே அதை அப்படியே உச்சரிக்கிறோம்.

விரதமும், விருந்தும்

குறிப்பிட்ட சில நாட்களில் பட்டினி விரதம் இருப்பதும், விரதம் முடிந்ததும் விருந்து சாப்பிடுவதும் வழக்கமாக இருக்கிறது. இது ஏன்?

எல்லா மனிதர்களாலும் எப்போதும் விரதம் இருக்க முடியாது. அதை படிப்படியாக பழக்கப்படுத்திக் கொள்ளவே சாஸ்திரம் குறிப்பிட்ட சில நாட்களை விரத நாட்களாக குறிப்பிடுகிறது.

தெய்வத்திற்குப் பிரியமானது என்றால் இயல்பாகவே நல்லதைச் செய்யும் மனப்பான்மை நமக்குள் வந்து விடுகிறது. அத்தகைய பண்பை வளர்த்துக் கொள்ளவே விரதங்கள் பயன்படுகின்றன.

அதே நேரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது விருந்து.

மனிதன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கப் பழக்குவதே பண்டிகை கால விருந்துகள்.

மானும், மீனும்

அம்பாளின் கண்களை ‘மீன்’ போன்று இருப்பதாகத்தான் வர்ணிப்பார்கள்.

எனவேதான் மதுரையில் ஆட்சி செய்யும் அம்பிகைக்கு ‘மீனாட்சி’ என்றும், ‘அங்கயற்கண்ணி’ என்றும் பெயர் ஏற்பட்டது.

அபிராமி அந்தாதியில் அம்பிகையை வர்ணிக்கும் அபிராமிபட்டர் ‘அம்பிகைக்கு மானின் விழியைப் போன்ற கண் இருப்பதாக’ வர்ணிக்கிறார்.

நூறு பாடல்களைக் கொண்ட அபிராமி அந்தாதியின் நூறாவது பாடலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

விடங்கலிங்கம் கதை தெரியுமா?

சிவலோகத்தில் சிவனின் விடங்க லிங்கம்(மிகச் சிறிய லிங்கம்) இருந்தது. இது பூலோகத்திலும் இருக்க வேண்டுமென அவர் விரும்பினார்.

இந்திரன் ஒரு முறை சிவனின் விடங்க லிங்கத்தை யாசித்தான். இந்த லிங்கத்தை யோக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கஷ்டம் என சிவன் கூறினார். இருப்பினும் இந்திரன் வற்புறுத்தியதால், சிவன் அதை அவனிடம் கொடுத்துவிட்டார்.

அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், பூஜையை நல்ல முறையில் நடத்தி வந்தான்.

ஒரு சமயம் இந்திரன் வாலாசுரன் என்ற அசுரனைக் கொல்பவர்களுக்கு தன்னிடமுள்ள ஐராவத யானை, வெண்குடை நீங்கலாக எதைக் கேட்டாலும் தருவதாகச் சொல்லியிருந்தான்.

பூலோகத்தை ஆட்சி செய்த முசுகுந்த சக்கரவர்த்தி, வாலாசுரனை அழிக்க இந்திரனுக்கு உதவி செய்தார்.

தான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “அவருக்கு என்ன வேண்டும்” என்று கேட்டான் இந்திரன்.

அவர் இந்திரனிடம் சாமர்த்தியமாக அவன் தினமும் பூஜை செய்யும் விடங்க லிங்கத்தைக் கேட்டார்.

இந்திரனோ, நிஜ லிங்கத்திற்கு பதிலாக முசுகுந்தனை ஏமாற்றி வேறு 6 லிங்கங்களை கொடுத்தான்.

இதையறிந்த முசுகுந்தன் விடங்க லிங்கத்தை அவன் தரவில்லை என்பதை தாரத்துடன் நிரூபித்து, வாக்குக் கொடுத்தால் அதன்படி சரியாக நடக்க வேண்டும் என்று இந்திரனை எச்சரித்து விடங்க லிங்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

இந்த ஏழு லிங்கங்களை திருவாரூரைச் சுற்றியுள்ள ஏழு கோவில்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் முசுகுந்தன்.

பெருமாள் கோவிலில் பவுர்ணமி வலம்

சிவத்தலங்களில் மலைக்கோவிலாக அமைந்த திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற கோவில்களில் பவுர்ணமியின்போது கிரிவலம் செல்வது வழக்கம்.

ஆனால் மதுரை கூடலழகர் கோவில் மலைக்கோவிலாக இல்லாவிட்டாலும் பவுர்ணமியின்போது இங்கும் கிரிவலம் நடக்கிறது.

சுவாமி சன்னதியைச் சுற்றி 108 முறை வலம் வருகின்றனர்.

இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்பதால், பக்தர்கள் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று மந்திரம் ஓதி 108 முறை வலம் வந்து நாராயணனை வழிபடுகின்றனர்.

இறைவன் தரும் பாதுகாப்பு வளையம்

நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும், அது இறைவனுக்குச் செய்வதாகவே நினைத்துச் செய்யுங்கள்.

அதை அவருக்கே அர்ப்பணம் செய்து விடுங்கள்.

உங்களுடைய எண்ணம், சொல், செயல்கள் எப்போதும் தூய்மையாகவும், சிறப்பானதாகவும் வைத்துக் கொள்ள வேண்டுங்கள்.

உங்களுக்கு எத்தகைய சிறிய பொருள்கள் கிடைப்பதாக இருந்தாலும் அது அவரது அருளால் மட்டுமே கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

உங்களது எண்ணத்தையும் அவரிடமே ஒப்படைத்து விடுங்கள்.

அதில் எப்போதும் அவரது நினைவை மட்டுமே கொண்டவராக இருங்கள்.
உங்களது பிரார்த்தனையை கேட்கும் அவர், அனைத்தும் நல்லதாகவே நடக்க அருள் புரிவார்.

இறைவன் ஒவ்வொருவரையும் இடைவிடாமல் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

பின்னால் வந்தாலும், அவரே நீங்கள் முன்னால் செல்வதற்கு வழி காட்டுபவராகவும் இருக்கிறார்.

அவரது அருளே உங்களைச் சுற்றி பாதுகாப்பு வளையமாக இருக்கிறது.
இறைவனுடைய அருளாகிய ஒளி மட்டுமே, அனைவரது இதயத்திற்கும் ஒளி என்னும் அறிவைத் தருவதாக உள்ளது.

உலகம் மீது கருணையும், இரக்கமும் கொண்டு காப்பவராக இருக்கும் இறைவனே அனைத்திலும் அனைத்துமாக இருக்கிறார்.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டு அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் நடந்து கொள்ள வேண்டும்.

Read Users' Comments (0)

RAJA

Welcome to Maharajan

Read Users' Comments (0)